சிங்கப்பூர் : அனைத்து குடும்பங்களுக்கு இன்று முதல் $300 CDC பற்றுச்சீட்டுகள்!!
சிங்கப்பூரில் உள்ள அனைத்து குடும்பங்கம் ஜனவரி 3-ஆம் தேதி(இன்று) முதல் 300 வெள்ளி பற்றுச்சீட்டுகளைப் பெற உள்ளனர்.
அன்றாடச் செலவுகளை சமாளிப்பதற்கு அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினங்களின் மத்தியில் பற்றுச்சீட்டுகள் உதவும்.
ஒரு குடும்பத்தின் சார்பாக ஒருவர் சிங்பாஸ் கணக்கை வைத்து அந்த பற்றுச்சீட்டுகளைப் பெறலாம்.
முன்பு வழங்கப்பட்டதுபடி,CDC பற்றுச்சீட்டுகளை go.gov.sg/cdcv என்ற இணையப்பக்கத்தில் மின்னியல் முறையில் பெறலாம்.
இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம்.
பற்றுச்சீட்டுகளைப் பெற்றவுடன் இணையப்பக்க முகவரியான gov.sg வழியாக பதிவு செய்யப்பட்ட மொபைல் போனுக்கு SMS அனுப்படும்.
குடும்பத்தில் உள்ள மற்றவர்களுடன் இந்த இணையப்பக்க முகவரியைப் பகிர்ந்து கொள்ளலாம்.
வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுகளில் பாதியை தகுதியான பேரங்காடிகளிலும் ,மற்ற பாதியை அருகிலுள்ள கடைகள் மற்றும் உணவகங்களிலும் பயன்படுத்தலாம்.
Follow us on : click here