ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்திற்கு சிம்பு பாடிய பாடல் வைரல்…!!!!

ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்திற்கு சிம்பு பாடிய பாடல் வைரல்...!!!!

தமிழ் திரையுலகில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து ஆகிய படங்கள் அவருக்கு பெரிய வெற்றியை தந்தது. அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியாக உள்ள அடுத்த படம் டீசல்.

பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து ஆகிய இரு வெற்றி படங்களை தொடர்ந்து டீசல் படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டீசல் படத்தின் பாடல் ஏற்கனவே இணையத்தில் ட்ரெண்டாகி விட்டது.இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் இணையத்தில் வேகமாக டிரெண்டாகி வருகிறது. இந்தப் பாடலுக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண் கமர்ஷியல் படங்களின் கதாநாயகனாக தன்னை காட்டுவதில் எவ்வளவு கவனமாக இருக்கிறாரோ, அதே அளவு தரமான கதைகளை தேர்வு செய்வதிலும் வல்லவர். அதுமட்டுமின்றி தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பையும் கொடுத்துள்ளார்.

இதன் மூலம் மக்கள் மத்தியில் தன்னைத் தொடர்ந்து அடையாளப்படுத்திக் கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் வெளியான டீசல் படத்தை சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக பொருட்செலவில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

டீசல் படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான பீர் சாங் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பாடல் மிகவும் பிடித்துப் போனது. குறிப்பாக இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள ஹம்மிங் இணையத்தில் உலகளவில் ட்ரெண்ட் ஆனது.இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான தில்லுபரு ஆஜா பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். அவருடன் பாடகி ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். இப்பாடலின் மெட்டு குத்து பாடலைப் போல் அமைந்ததால் என் இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஏற்கனவே சிம்பு டிராகன் படத்தில் பாடிய பாடல் மிகுந்த வரவேற்பு பெற்றது. இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தீவிர சிம்பு ரசிகர் என்பதால் அவருக்காக சிம்பு இந்தப் பாடலைப் பாட ஒப்புக்கொண்டார். டீசல் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.