என்னை முதலில் தட்டிக் கொடுத்ததே சிம்பு தான்..!! நடிகர் விக்னேஷ் சிவன் பேச்சு…!!!

என்னை முதலில் தட்டிக் கொடுத்ததே சிம்பு தான்..!! நடிகர் விக்னேஷ் சிவன் பேச்சு...!!!

அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள டிராகன் படம் வரும் 21ஆம் தேதி வெளியாகிறது.படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

இப்படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் வெளியான விடாமுயற்சி படத்தால் டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

லவ் டுடே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான படம் தான் டிராகன். இந்தப் படத்தில் அவருடன் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர், ஹர்ஷத், கௌதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 14ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட இயக்குனரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன் சிம்பு பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அஸ்வத் மாரிமுத்து இதற்கு முன் ஓ மை காட் படத்தை இயக்கியிருப்பதால், இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவை அவரது குறும்படங்கள் மூலம் தெரியும். என் படத்தில் பிரதீப் ரங்கநாதனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் லியோன் இசையில் முன்பு நான் எழுதிய ஃபிலிம் காட்டாதடி என்ற பாடல் வரிகளை எனக்கே தெரியாமல் மாற்றினார்.அதை லியோன் திமிரு காடாத்தி என்று மாற்றி பாடலை உருவாக்கினார்.ஆனால் டிராகன் படத்தில் நான் எழுதிய பாடலை எடிட்டிங் செய்யாமல் அப்படியே உருவாக்கியுள்ளார்.

போடா போடி படத்தில் ‘மாடிக்கிட்டேன்’னு ஒரு பாட்டு வரும். சுமார் ஒன்றரை வருடங்களாக அந்தப் பாடலைப் பதிவு செய்ய முடியவில்லை. அப்போது சிம்பு சார் என்னை அழைத்து, விக்கி எல்லாப் பாடல்களையும் நல்லா எழுதுற ஆனா அதுல மாட்டிக்கிட்டேன்னு ஒரு வார்த்தைய எழுதி, இப்ப பாரு ஒன்றரை வருடமா பாடலை எடுக்க முடியவில்லை என்று கூறினார்.

அதில் இருந்து எந்தப் பாடலை எழுதினாலும் கவனமாக எழுதுவேன். நான் பாடல்கள் எழுத ஆரம்பித்தபோது, ​​சிம்பு சார்தான் என்னை அழைத்து நீ நல்லா பாட்டு எழுதுற, நீயே எழுது என்று ஊக்கப்படுத்தினார். “ஆரம்பம் ”படத்துல எல்லாமே இனிமே நல்லா இருக்கும்.. என்ற பாடலை எழுதிய பிறகுதான் நான் படத்துக்கு கமிட்டானேன். “இது என் வாழ்க்கையை மாற்றியது,” என்று அவர் கூறினார். அந்தப் பாடல் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது”. தற்போது இந்தச் செய்தி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனுக்கு சிம்பு அறிவுரை வழங்கியது குறித்து இணையத்தில் பலரும் பேசி வருகின்றனர்.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan