சிங்கப்பூரின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு விமான பயணிகளுக்கு இன்பச் செய்தியை அறிவித்துள்ள SIA, Scoot!!

சிங்கப்பூரின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு விமான பயணிகளுக்கு இன்பச் செய்தியை அறிவித்துள்ள SIA, Scoot!!

சிங்கப்பூர் அதன் 60 வது பிறந்தநாளை கொண்டாட உள்ளது.அதை கொண்டாடும் விதமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் scoot நிறுவனம் அதன் பயணிகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கவுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த மாதம் 11 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 77 நாடுகளுக்கு பயணச் சலுகைகளை வழங்கும்.அதை இந்த மாதம் 12 ஆம் தேதி முதல் இந்த ஆண்டு நவம்பர் 19 வரை பயன்படுத்தலாம்.

இந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை scoot நிறுவனம் 60 நாடுகளுக்கு பயணச் சலுகைகளை வழங்கும்.ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் இந்த ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி வரை அவற்றை பயன்படுத்தலாம்.

பயணச்சீட்டுகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்,scoot ஆகிய விமான நிறுவனங்களின் இணையப்பக்கம்,செயலிகள் அல்லது பயண முகவர்கள் மூலமாக வாங்கலாம்.