
உலகமெங்கும் அனைவராலும் விரும்ப கூடியது சாக்லேட். இதற்கு அடிமை ஆகாதவர்கள் எவரும் இல்லை. சிறு வயது முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிட கூடியது.
அளவில்லா சந்தோச தருணத்தில் அதனைப் பகிர்ந்துக் கொள்வார்கள். ஒரு சாக்லேட் நிறுவனம் தயாரிக்கும் சாக்லேட் சிலவற்றில் உலோக நுண்துகள்கள் கண்டறியப்பட்டுள்ளதாக Consumer Reports அறிக்கை வெளியிட்டுள்ளது. அதைப் பற்றி விவரமாக காண்போம்.
Consumer reports எனும் லாப நோக்கமில்லாத பயனீட்டாளர் குழு கடந்த 2022-ஆம் ஆண்டு Hershey சாக்லேட்டுகள் ஒரு சிலவற்றில் உலோக நுண்துகள்கள் கண்டறியப்பட்டதாக அறிக்கை வெளியிட்டது. ஆபத்தை ஏற்படுத்த கூடிய உலோக நுண்துகள்கள் Hershey சாக்லேட்டுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
அதில் lead,cadmium ஆகியவற்றை நீக்குவதற்கு நிறுவனம் ஆராய்ந்து வருவதாக கூறியது.
Special Dark mildly sweet chocolate,extra dark chocolate 70%,Lily´s extremely dark chocolate 85% ஆகியவை கண்டறியப்பட்டது.
நாளொன்றுக்கு ஓர் ounce அதிகமான சாக்லேட்டுகளை சாப்பிடுபவர்களுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்தது.
இது குறித்து Hershey நிறுவம்,“ உலோக நுண் துகள்கள் மண்ணில் இயற்கையாகவே இருக்கிறது என்றும் அவைகள் சாக்லேட்களிலும் இருக்கக்கூடும்´´ என கூறியது.cocoa கொட்டைகளிலிருந்து சாக்லேட் தயாரிக்கப்படுகிறது.
தயாரிக்கும் பொழுது அதிலிருந்து உலோக துகள்கள் பெரும்பாலும் அகற்றப்படுகிறது.
முற்றிலும் அவற்றை அகற்றுவது குறித்து ஆராயப்படும். இவ்வாறு சாக்லேட் நிறுவனம் சொன்னது.