அதிர்ச்சி..!! பிரபல பின்னணி பாடகி தற்கொலை முயற்சி..!!!

திரைப்பட பின்னணி பாடகி கல்பனா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கல்பனா தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான பாடல்களைப் பாடி பிரபலமானவர்.அவரது தந்தை டி.எஸ்.ராகவேந்திரா ஒரு நடிகர், இசையமைப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகர், அதேபோல அவரது தாயும் ஒரு பின்னணிப் பாடகி ஆவார்.
இசை குடும்பத்தை சேர்ந்த கல்பனா, புன்னகை மன்னன் படத்தில் நடித்துள்ளார். மேலும்
என் ராசாவின் மனசிலே படத்தில் இடம் பெற்ற போடா போடா புண்ணாக்கு, தம்பி பொண்டாட்டி படத்தில் ஏறு மயில் ஏறி, பசும்பொன் படத்தில் தென்னாட்டில் சிங்கம், பிரியமான தோழி படத்தில் பெண்ணே நீயூம் பெண்ணா என்று ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
நாகார்ஜுனா அக்கினேனி தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் தெலுங்கு’ முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட கல்பனா ராகவேந்திரா 11வது இடத்தைப் பிடித்த பிறகு அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் 44 வயதான பாடகி ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டில் உள்ள தனது வீட்டில் மார்ச் 4 செவ்வாய்க்கிழமை மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார்.
2 நாட்களாகியும் கல்பனா அறையின் கதவை திறக்காததால், அவரது அருகில் வசிப்பவர்கள் கவலையடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற அதிகாரிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. தற்போது அவர் மருத்துவமனையில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் தெரியவில்லை.மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
Follow us on : click here