அதிர்ச்சி..!!ஜெர்மனியில் மீண்டும் நடந்த கார் தாக்குதல் சம்பவம்..!!

அதிர்ச்சி..!!ஜெர்மனியில் மீண்டும் நடந்த கார் தாக்குதல் சம்பவம்..!!

ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள மன்ஹைய்ம் நகரில் கார் ஒன்று திடீரென்று மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் 15 பேர்
படுகாயமடைந்ததாகவும்,
25 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று (மார்ச் 3) இடம்பெற்றுள்ளது.

கூட்டத்தின் மீது காரை மோதியதாக சந்தேகிக்கப்படும் நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர் தனியாக தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். அந்த நபர் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஜெர்மனியில் சமீபகாலமாக கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவங்களால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தால், ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் நேன்சி ஃபெஸர்,கோலோனில் நடைபெறும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்தார்.

மதம் சார்ந்த கொண்டாட்டங்களின் போது தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக வலைதளங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால் அங்கு போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வுடன் தயார் நிலையில் உள்ளனர்.