கடன் பெற்றவர்களின் தனிப்பட்ட விவரங்கள் இணையதளத்தில் பரவியதால் அதிர்ச்சி!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்கியவர்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்துள்ளன.
சட்ட அமைச்சகம் உறுதி செய்துள்ள தகவலின் படி, Ezynetic இன் சேவைகளைப் பயன்படுத்தி உரிமம் பெற்ற 12 கடன் வழங்கும் நிறுவனங்களின் சுமார் 128,000 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் களவாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் பான் கிங் கிரெடிட், கிரெடிட் 21, லெண்டிங் பீ, கட்டோங் கிரெடிட், கிரெடிட் தர்டி3, ஜிஎஸ் கிரெடிட், 1ஏபி கேபிடல், கிரெடிட்மாஸ்டர், பிஎஸ்டி கிரெடிட், யு கிரெடிட், ஹாரிசன் கிரெடிட், கிரெடிட் மேட்டர்ஸ். வாடிக்கையாளர் பெயர், அடையாள அட்டை எண்,பெறப்பட்ட தொகை விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் கசிந்தன.
இந்த விவரங்கள் பல இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் மோசடி முயற்சிகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்குமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Follow us on : click here