சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கலந்து கொள்ளாதது வருத்தம்- சோயிப் அக்தர்

சாம்பியன் டிராபியின் இறுதி போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 252 ரண்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்தியா 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி 76 ரன்கள் எடுத்தார். கடைசி வரை களத்தில் இருந்த கே.எல்.ராகுல் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணி வெற்றி பெற்றதை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். மேலும் விராட் கோலி மைதானத்தில் துள்ளி குதித்தார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை மூன்றாவது முறையாக வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. இந்தியா வென்ற 7வது ஐசிசி தொடர் இதுவாகும்.
பாகிஸ்தான் தொடரை நடத்தியிருந்தாலும், இந்தியா விளையாடிய போட்டிகள் மட்டுமே துபாயில் நடைபெற்றன. இந்த சூழ்நிலையில், ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா மற்றும் பி.சி.சி.ஐ தலைவர் ரோஜர் பின்னி வெற்றிக்கான விருதுகளையும் கோப்பைகளையும் வீரர்களுக்கு வழங்கினர்.
இந்த சூழலில், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் தனது நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை கடுமையாக எதிர்த்துள்ளார்.இது குறித்து அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தொடரை நடத்துகிறது.ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் யாரும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இது எனக்கு ஆச்சரியமாகவும், விசித்திரமாகவும் இருக்கிறது. தொடரை நடத்தும் நீங்கள் ஏன் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை? சாம்பியன்ஸ் டிராபி ஒரு உலகத் தரம் வாய்ந்த மேடை என்று கூறியுள்ளார்.
இந்தத் தொடரை நடத்தும் பொறுப்பில் நீங்கள் இருந்தபோது, அந்த மேடையில் யாராவது இருந்திருக்க வேண்டாமா? சாம்பியன்ஸ் டிராபியை வென்றதற்காக இந்தியாவுக்கு ஒரு கோப்பையை வழங்கியிருக்க வேண்டாமா? நீங்கள் செய்யும் அனைத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
தனக்கு மிகவும் வேதனையாக இருப்பதாக சோயிப் அக்தர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மீண்டும் இதுபோன்ற தவறைச் செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார்.
இறுதிப் போட்டி லாகூரில் இருந்து மாற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தியா விளையாடும் இறுதிப் போட்டியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் புறக்கணித்துள்ளனர்.இது இந்தியாவை அவமானப்படுத்தும் விதமாக இருப்பதாக சோயிப் அக்தர் குற்றம் சாட்டியுள்ளார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan