பரபரப்பு….நடுக்கடலில் மோதிகொண்ட கப்பல்கள்!! இரண்டாவது நாளாக எரியும் தீ!!

பரபரப்பு....நடுக்கடலில் மோதிகொண்ட கப்பல்கள்!! இரண்டாவது நாளாக எரியும் தீ!!

ஐரோப்பாவின் இங்கிலாந்து கடற்கரையில் அமெரிக்க இராணுவத்திற்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பலும்,சரக்குக் கப்பலும் மோதிக்கொண்டன.

இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கப்பல் ஊழியர்களை தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் இங்கிலாந்து கடற்கரையிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் நிகழ்ந்தது.

இந்தச் சம்பவம் “மிகவும் கவலையளிக்கிறது” என்று பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் மூன்று படகுகளில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.