ஒரே நாளில் மூன்று பேரைத் தாக்கிய சுறாக்கள்!! ஒருவரின் கை துண்டான சோகம்!!
புளோரிடாவில் வளைகுடா கடற்கரையில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் சுறாக்களால் மூன்று தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று வட மேற்கு புளோரிடாவில் உள்ள வால்டன் கவுண்டியில் ஒரு பெண்ணை சுறா தாக்கியது. இதனால் அந்த பெண்ணின் கையின் ஒரு பகுதியை துண்டாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இச்சம்பவம் நடந்து இரண்டு மணி நேரத்திற்குள் மற்றொரு சம்பவம் நடந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கே நான்கு மைல் தொலைவில் கடற்கரையில் சுமார் 15 வயதுடைய இரண்டு பெண்கள் தங்களின் நண்பர்களுடன் கடலில் விளையாடி மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
அந்த இரண்டு டீன் ஏஜ் பெண்களை சுறாக்கள் தாக்கியது. அவர்களில் ஒருவருக்கு கை மற்றும் கால் பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும், மற்றொருவருக்கு காலில் சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவங்களை அடுத்து வளைகுடாவில் எப்போதும் சுறாக்கள் இருப்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் என வால்டன் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நீச்சல் அடிப்பவர்கள் மற்றும் கடற்கரைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடற்கரைக்கு செல்வோர் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Follow us on : click here