மூன்று பேர், Vanuatu-விலிருந்து Australia-வுக்குப் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவர்கள் பயணம் செய்த inflatable catamaran-ஐ, சுறாக்கள் தாக்கின.
சுறாக்கள் நிரம்பிய பவளக் கடலில் அவர்கள் மூவரும் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சரக்குக் கப்பலில், அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
பல சுறா தாக்குதல்களைத் தொடர்ந்து, கப்பலின் hulls சேதமடைந்துள்ளதாக ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பவளக் கடல்- reef sharks, tuna மற்றும் marlin போன்ற பிற இனங்களால் நிறைந்துள்ளது என்றும், உலகில் உள்ள வேறு எந்த ஆய்வு தளத்தையும் விட, இங்கு அதிகமான சுறாக்கள் இருக்கின்றன என்றும் ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியது.
மூன்று பேரும் எந்த காயமும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று Voyage Spokesperson, Kosikhina கூறினார்.