செந்தோசா பலவான் கடற்கரையில் தென்பட்ட சுறா…!!!அலறி ஓடிய மக்கள்…!!

செந்தோசா பலவான் கடற்கரையில் தென்பட்ட சுறா...!!!அலறி ஓடிய மக்கள்...!!

சிங்கப்பூர்: செந்தோசா, பலவான் கடற்கரையில் சமீபத்தில் சுறா மீன் ஒன்று தென்பட்டது.

இம்மாதம் செப்டம்பர் முதல் தேதியில் பிற்பகல் 3.15 மணியளவில் பலவான் கடற்பரப்பில் “பிளாக்டிப் ரீஃப்” வகை சுறா மீன் ஒன்று காணப்பட்டதாக செந்தோசா வளர்ச்சிக் கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளிவந்தது.

கடற்கரையில் இருந்தவர்கள் முதலில் 40 செ.மீ நீளம் கொண்ட சிறிய சுறாவை பார்த்ததாகவும்,அதற்கு அடுத்த நொடியில்
1.5 மீ நீளம் கொண்ட“பிளாக்டிப் ரீஃப்” சுறாவை பார்த்ததாகவும் கூறினார்.

நீச்சல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தவர்கள் சுறாவை கண்டதும் கூச்சலிட்டதாகக் கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலில் நீந்திக் கொண்டிருந்தவர்களை அதிகாரிகள் உடனடியாக வெளியேற்றினர்.

பலவான் கடற்கரையில் நீச்சல் மற்றும் நீர் சார்ந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

கடற்கரையில் செல்வதற்கு தடை விதிப்பது போன்ற கொடிகளும் அங்கு பறக்கவிடப்பட்டன.

ஆளில்லா விமானம் பறக்க விடப்பட்டு ஆய்வு செய்ததில் சுறா மீன்கள் எதுவும் தென்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீச்சல் மற்றும் நீர் தொடர்பான நடவடிக்கைகள் தொடர அனுமதிக்கப்பட்டன.

பலவான் கடற்கரையின் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக கழகம் தெரிவித்தது.

 

Follow us on : click here ⬇️