அஸ்வின் இடத்தை பிடிக்க போராடும் ஷர்துல் தாகூர்…!!!

அஸ்வின் இடத்தை பிடிக்க போராடும் ஷர்துல் தாகூர்...!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவராக ஷர்துல் தாகூர் வளர்ந்து வந்தார்.

இவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க தொடர்ந்து போராடி வருகிறார். அதற்காக தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ​​ரஞ்சியில் சிறப்பாக விளையாடினார். இதுவரை 21.16 பந்துவீச்சு சராசரியுடன் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் 396 ரன்களும் எடுத்துள்ளார். இரண்டு போட்டிகளில் அவர் அடித்த சதம் மும்பை அணியை மீண்டும் அரையிறுதிக்கு கொண்டு வர உதவியது. இவரின் இந்த செயற்பாட்டின் மூலம் தெரிவுக்குழுவை அவர் பக்கம் ஈர்த்துள்ளார் என்றே கூறலாம்.

இந்நிலையில் இது குறித்து பேசிய அவர், “எனக்கு எப்போதுமே நம்பிக்கை அதிகம்.. நான் கண்டிப்பாக மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.

தற்போது இந்திய அணிக்கு ஏழாம் எண் மற்றும் எட்டாம் இடத்தில் பேட் செய்யத் தெரிந்த ஒரு பவுலர் தேவை. அந்த வகையில் இந்திய டெஸ்ட் அணியின் பேட்டிங்கில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏற்கனவே நிறைய பங்களிப்பை அளித்துள்ளார். அதேபோன்ற பங்களிப்பை நானும் கொடுக்க விரும்புகின்றேன் என்று கூறியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் நிச்சயம் இடம் கிடைத்தால், பேட்டிங்கிலும் என்னால் நிச்சயம் கைகொடுக்க முடியும். அதேபோல், புதிய பந்தாக இருந்தாலும் சரி, பழைய பந்தாக இருந்தாலும் சரி எந்த பந்தையும் வீச தயாராக இருக்கிறேன்.

ஷர்துல் தாகூர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பிடிப்பதற்காக சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.