உலகின் முக்கிய பாதுகாப்பு துறைகளின் தலைவர்கள் சிங்கப்பூரில் ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசியாவின் உச்ச பாதுகாப்பு மாநாட்டான ஷங்ரிலா உரையாடலின் போது இந்த சந்திப்புகள் நடைபெற்றதாக ஐவர் Reuters செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
சில ஆண்டுகளாக அத்தகைய சந்திப்புகள் நடத்தப்படும். அது வேறு இடத்தில் ரகசியமாக வைக்கப்படுவதாக அவர்கள் கூறினர்.
சுமார் 20 தலைவர்கள் அந்த சந்திப்பில் சந்தித்ததாக கூறப்படுகிறது.
அவர்களில் சீனா,அமெரிக்கா,இந்தியா ஆகிய நாடுகளின் பாதுகாப்பு தலைவர்களும் அடங்குவர்.
அந்த கலந்துரையாடலில் பங்கேற்கும்போது பாதுகாப்பு துறைகளின் மூத்த அதிகாரிகளும் சந்தித்து பேசுகின்றனர் என்று சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சகத்தின் பேச்சாளர் Reuters- யிடம் கூறினார்.
சந்திப்புகளுக்கு சிங்கப்பூர் ஏற்பாடு செய்யலாம் என்றும் சொன்னார்.
நேற்றுடன் (ஜூன் 4) ஷங்ரிலா கலைந்துரையாடல் நிறைவு பெற்றது.
இதில் 49 நாடுகளின் பேராளர் பங்கேற்றனர்.