Singapore News in Tamil

சிங்கப்பூர் டெஸ்ட் அடிக்க போகலாமா? வேண்டாமா?எங்கு சென்று டெஸ்ட் அடிக்கலாம்? எவ்வளவு பணம் கட்டலாம்?

சிங்கப்பூருக்கு S Pass, E Pass, Work Permit, TEP Pass ஆகியவற்றின் மூலம் செல்லலாம்.ஆனால், சிங்கப்பூருக்கு செல்ல மற்றொரு சிறந்த வழியும் உண்டு. டெஸ்ட் அடித்து சிங்கப்பூருக்கு செல்லலாம்.

முதலில், இங்கு பலருக்கு டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன? என்பது பற்றி தெரியும். ஆனால், ஒரு சிலருக்கு அதைப் பற்றிய விவரம் தெரியாமல் இருப்பர்.

இதற்குமுன் எங்களின் இணைய பக்கத்தில் டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன? என்பதைப் பற்றி பதிவிட்டுள்ளோம்.

அதனுடைய லிங் கொடுத்துள்ளோம். டெஸ்ட் பற்றிய முழு விவரம் தெரியாதவர்கள் அதனைப் படித்துவிட்டு வாருங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு அதைப் பற்றி புரிதல் இருக்கும்.

கிளிக் செய்யவும் 👇👇

https://www.sgtamilan.com/what-is-skillet-test/: சிங்கப்பூர் டெஸ்ட் அடிக்க போகலாமா? வேண்டாமா?எங்கு சென்று டெஸ்ட் அடிக்கலாம்? எவ்வளவு பணம் கட்டலாம்?

தற்போதைய சூழலில் இப்போது டெஸ்ட் அடிக்க போகலாமா? வேண்டாமா? எங்கு சென்று டெஸ்ட் அடிக்கலாம்? அதற்கு எவ்வளவு பணம் கட்டலாம்? என்பதைப் பற்றிய தெளிவான விளக்கத்தைக் காண்போம்.

சிங்கப்பூருக்கு செல்ல மிகச் சிறந்த வழி டெஸ்ட் அடித்து செல்வது. ஆனால், இதிலும் ஒரு சில Institutes தவறான தகவல்களைக் கூறி அட்மிஷன் போடுகின்றனர்.

அட்மிஷன் போட்டுவிட்டு இழுத்து அடிக்கிறார்கள். இது போன்று செய்யும் Institutes களுக்கு செல்லாமல், எப்படி சரியான Institutes களுக்கு செல்வது? அதைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

டெஸ்ட் அடிப்பதற்கு அட்மிஷன் போடலாமா? என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. தற்போது டெஸ்ட் அடிக்க தாராளமாக அட்மிஷன் போடலாம்.

இப்போது காத்திருப்பு நேரம்(waiting time) குறைந்துள்ளது. இதற்கு முன் இருந்ததை விட தற்போது சற்று குறைந்துள்ளது.

ஏனென்றால்,Quota அதிகரித்து வருவதால் காத்திருக்கும் நேரமும் குறைந்து வருகிறது.

அதே சமயத்தில் Quota அதிகரிப்பது போல்,அதற்கு ஆகும் செலவும் அதிகரித்து வருகிறது.

இதற்கு முன் டெஸ்ட் அடிப்பதற்கு இரண்டு லட்சத்து முப்பதாயிரத்திலிருந்து இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்திற்குள் முடிந்து விடும்.

இப்போது மூன்று லட்சத்திலிருந்து மூன்று லட்சத்து முப்பதாயிரம் வரை கேட்கின்றனர்.

ஒரு சில Institutes அவர்களே கம்பெனி போட்டு தருவதாகவும் கூறுகின்றனர்.

டெஸ்ட் அடிப்பதற்கு மிக முக்கியமானது INSTITUTES.

நீங்கள் எந்த Institutes சென்றாலும் அங்கு டெஸ்ட் அடித்து இருப்பவர்களிடம் கேட்க வேண்டிய விஷயங்கள் :

◼️ அவர்கள் கடைசியாக எப்போது Main Test ஏத்தினார்கள்? என்று கேட்க வேண்டும்.

◼️ எவ்வளவு செலவானது? எத்தனை நாட்கள் காத்திருப்பு நேரம்(Waiting time)? என்பதைப் பற்றி கேட்டு விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதன்பின், நீங்கள் எந்த Trade – இல் டெஸ்ட் அடிக்க உள்ளீர்களோ? அதற்கான காத்திருப்பு நேரத்தை (Waiting time) கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

அதன்பின், எந்த Trade – இல் ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள்?என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் செல்லும் Institutes களிலேயே அதைப் பற்றி முன்கூட்டியே சொல்லி விடுவார்கள். அதன்பின், அதைப் பற்றிய முழு விவரத்தையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

அதற்கான முழு செலவு எவ்வளவு என்பதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு சிலர் அட்மிஷன் போடுவதற்கு முன் இவ்வளவுதான் செலவாகும் என்று கூறுவார்கள். ஆனால், அட்மிஷன் போட்டதற்குப் பின் மாற்றி பேசுவார்கள்.

அவர்கள் கூறிய செலவை விட அதிகமாக கூறுவார்கள்.

அதனால் முன்கூட்டியே அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

எல்லாவற்றையும் தெளிவாக பேசி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

தற்போது, தாராளமாக டெஸ்ட் அடிக்க போகலாம்.

கணிசமாக Quota எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதேபோல்,டெஸ்ட் அடித்தவர்களுக்கும் ரிசல்ட் வந்து கொண்டு தான் இருக்கிறது.