அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல்!! மக்கள் அவதி!! 5 பேர் பலி!!

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல்!! மக்கள் அவதி!! 5 பேர் பலி!!

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல் காரணமாக குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

உயிரிழந்தோர் Missouri, Kansas நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன.

அமெரிக்காவில் சில பகுதிகளில் 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பனி கொட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மற்றும் தென் மாநிலங்களில் பயண நிலைமைகள் ஆபத்தானதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 300000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை.

பல மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து பள்ளிகளும், அலுவலகங்களும் மூடப்பட்டன.

வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை 7 முதல் 14 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.இதனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுமார் 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg