நேற்று சிங்கப்பூரில் DBS இணைய வங்கி சேவைகளில் தடங்கல் ஏற்பட்டது.
இதற்குமுன் மார்ச் 29-ஆம் DBS வங்கியில் இணைய சேவைகளில் தடங்கல் ஏற்பட்டிருந்தது.
தற்போது இரண்டாவது முறையாக தடங்கள் ஏற்பட்டுள்ளது.
Paylah! போன்ற DBS இணைய சேவைகளையும், செயலிகளையும் பயன்படுத்த முடியவில்லை என்று பயனீட்டாளர்கள் கூறினர்.தடங்கல் குறித்து DBS Facebook பக்கத்தில் பயனீட்டாளர்கள் புகார் அளித்தனர்.
Paywave கட்டணச் சேவை, Debit Card, தானிய வங்கி ஆகியவற்றையும் பயன்படுத்த முடியவில்லை என்றும் கூறினர்.
Digibank கணக்கை ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமானோர் அணுகுவதாக DBS Facebook பக்கத்தில் கூறியது.
அதோடு, பயனீட்டாளர்களிடம் பொறுமையாக இருக்கும் படி கேட்டுக்கொண்டது.
மே,5-ஆம் தேதி(நேற்று) நண்பகல் வேளையிலிருந்து சேவைகளில் தடங்கல் ஏற்பட்டிருப்பதாக Downdetector இணைய பக்கம் காட்டுகிறது.