பரபரப்பு..!!! விமானத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற இளைஞர் கைது..!!!

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கியுடன் விமானத்தில் ஏற முயன்றதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் பயணிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
நேற்று (மார்ச் 6) மெல்பர்ன் நகருக்கு அருகே உள்ள அவலோன் விமான நிலையத்திற்கு 17 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்ததாகக் கூறப்படுகிறது.
விமான நிலையத்தைச் சுற்றியுள்ள வேலியில் இருந்த ஒரு துளை வழியாக அந்த இளைஞர் உள்ளே நுழைந்ததாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
அதன் பின்னர் அந்த இளைஞர் சிட்னிக்கு புறப்படவிருந்த ஜெட்ஸ்டார் விமானத்தில் ஏற முயன்றதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே 160 பேர் விமானத்தில் இருந்தனர்.
துப்பாக்கி ஏந்திய ஒருவர் விமானத்தை நோக்கி நெருங்கி வருவதைக் கண்ட சிலர் உடனடியாக அவரைத் தடுக்க விரைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் இதுவும் ஏற்படவில்லை.
காவல்துறையினர் அந்த இளைஞரை உடனடியாக கைது செய்தனர்.
அந்த இளைஞரை தடுத்ததாக நம்பப்படும் மூன்று பேரையாவது காவல்துறையினர் பாராட்டினர்.
அந்த இளைஞர் தனியாக செயல்பட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
துப்பாக்கியை வைத்து அவர் என்ன செய்ய நினைத்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக இளைஞரிடம் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan