சிங்கப்பூரில் `Forward Singapore´ எனும் `முன்னேறும் சிங்கப்பூர்´ திட்டத்தில் பெரும்பாலான மூத்தோர்கள் தொழில்நுட்பம் சார்ந்தவற்றை பயன்படுத்துவதில் சிரமம் படுகின்றனர் என்பதைப் பற்றிப் பேசப்பட்டது.
இதனை தொடர்பு,தகவல் அமைச்சர் Josephin Teo அமைச்சர் பேசினார்.
சிங்கப்பூரில் பெரும்பாலான மூத்தோர்கள் தொழில்நுட்பத்தில் ஒரு சில அம்சங்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு பலவற்றைப் பயன்படுத்த சிரமமாக இருக்கின்றது.
இதுபோன்ற சிரமத்தை 70 வயதுக்கும் அதிகமானோரில் 10 இல் 6 பேர் சிரமத்தை எதிர்கொள்வதாக கூறப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியில் இவர்களை விட்டு விடக்கூடாது என்று தொடர்பு, தகவல் அமைச்சர் கூறினார்.
சிங்கப்பூரில் பெரும்பாலான மூத்தோர்கள் தொலைபேசி மூலம் கட்டணம் செலுத்துவது அவர்களுக்கு சிரமமாக இருக்கின்றது.
அவர்களுக்கு கிடைக்கும் தகவலானது உண்மையா, பொய்யா என்று இணையத்தில் சரி பார்ப்பதிலும் சிக்கலைச் சந்திப்பதாக தெரியவந்துள்ளது.
அவர்கள் இதுபோன்ற சிக்கல்களைச் சந்தித்த போதிலும், அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பம் மேம்படுத்தி உள்ளதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
தொடர்பு தகவல் அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் இந்த தகவல்கள் கிடைத்ததாக கூறினார்.
இந்த திட்டத்தில் இது போன்ற சவால்கள் என்னென்ன இருக்கின்றது என்பதையும்,அவற்றை எப்படி களையலாம் என்பதை பற்றியும் பேசப்பட்டது.