உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்தை மூத்த அமைச்சர் லீ சியன் லூங் திறந்து வைத்தார்!!

உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்தை மூத்த அமைச்சர் லீ சியன் லூங் திறந்து வைத்தார்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்தைத் திறந்து வைத்தார்.

7.6 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த வளாகம் வடப் பகுதி மக்களுக்கு ஒருங்கிணைந்த சுகாதார சேவையை வழங்குகிறது.

தற்போதும், எதிர்காலத்திலும் வட பிராந்தியத்தில் வாழும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய வளாகம் முழுமையாக செயல்படும் போது 1,000 படுக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

நீண்ட கால பராமரிப்புக்காக 400 படுக்கைகள் கொண்ட மூத்த பராமரிப்பு வசதியும் உள்ளது.

மேலும் “இந்த வளாகம் வழக்கமான சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பகல்நேர பராமரிப்பு, வீட்டு பராமரிப்பு, நர்சிங் கேர் மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு உள்ளிட்ட நீண்ட கால பராமரிப்பு சேவைகளையும் வழங்கும்,” என்று அவர் கூறினார்.

ரென் சி மருத்துவமனை அதை இயக்கி வருகிறது.

ஒருங்கிணைந்த வளாகத்தில் தேசிய பூங்கா கழக நிர்வாகத்தின் கீழ் 1.7 ஹெக்டேர் உட்லண்ட்ஸ் மூலிகை தோட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.