27-வது வருடாந்திர இருதரப்பு பயிற்சியை சிங்கப்பூர் – மலேசிய ஆயுதப்படையினர் நிறைவு செய்துள்ளனர்.
சுமார் 380 பேர் இவ்வாண்டு Semangat Bersatu பயிற்சியில் கலந்து கொண்டனர்.
பயிற்சியில் நிபுணத்துவப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன.
இந்த ஆண்டு பயிற்சியில் ஆளில்லா வானூர்தி இயக்கும் நடைமுறையும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
1989-ஆம் ஆண்டில் சிங்கப்பூர்-மலேசிய ஆயுதப்படையினர் முதன்முறை இருதரப்பு பயிற்சியைத் தொடங்கினர்.
இந்த பயிற்சி இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே உள்ள தொடர்புகளை வலுப்படுத்தும் தளமாக அமைந்துள்ளது.
அது சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் இடையே இருக்கும் நீண்ட கால தற்காப்பு உறவை பிரதிபலிக்கிறது.