HIV க்கான சுய பரிசோதனை கருவிகள் Guardian,watsons கடைகளில் கிடைக்க உள்ளது...!!!!
சிங்கப்பூர்: மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV)க்கான சுய பரிசோதனை கருவிகள் சிங்கப்பூரில் உள்ள கடைகளில் விரைவில் கிடைக்கும்.
இந்தக் கருவிகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் கார்டியன் மற்றும் வாட்சன் ஆகிய கடைகளில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV)க்கான சுய பரிசோதனை ஆகஸ்ட் 2022 இல் தொடங்கப்பட்டது.
இதற்கு முன் HIVக்கு பரிசோதனை செய்யப்படாதவர்கள் சுய பரிசோதனைக்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
சோதனையின் வழி நோய் இருப்பது தெரிந்தால்,விரைவில் சிகிச்சை பெற்று மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கலாம்.
பரிசோதனை மூலம் மட்டுமே நோய் இருக்கிறதா என்பதை அறிய முடியும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுய பரிசோதனையில் நோய் இருப்பதைக் காட்டினாலும்,அதை உறுதிப்படுத்த மருத்துவரிடம் செல்லுமாறு கோரப்படுகிறது.
Follow us on : click here