சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட காய்கறிகள் பறிமுதல்...!!!
சிங்கப்பூர்:மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு கொண்டு வரப்பட்ட 280 கிலோகிராம் காய்கறிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதில் பாகற்காய், பூசணி, வெண்டைக்காய் மற்றும் தோலுரித்த வெள்ளை பூண்டு ஆகியவை அடங்கும்.
கடந்த வாரம் உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் தேசிய உணவு நிறுவனம் மற்றும் குடிவரவு சோதனைச் சாவடி ஆணையம் இணைந்து சோதனை நடத்தினர்.
இரண்டு லாரிகளில் சரக்குகள் ஏற்றப்பட்டதாக சந்தேகம் எழுந்ததால் சோதனை நடத்தப்பட்டது.
2 இறக்குமதியாளர்கள் சில பொருள்களைக் கணக்கில் காட்டாமல் சிலவற்றைக் குறைத்துக் காட்டியிருந்தனர்.
சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து உணவுப் பொருள்களும் தகுந்த ஆதாரத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
சிங்கப்பூரில் காய்கறிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தால் 10,000 வெள்ளி வரை அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
Follow us on : click here