அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்...!!! படகில் கண்டுபிடிக்கப்பட்ட 300 பேர்..!!!
மலேசியா இரண்டு படகுகளில் வந்த சுமார் 300 மியான்மர் குடியேற்றவாசிகளை திருப்பி அனுப்பியுள்ளது.
அவர்களிடம் முறையான பயண ஆவணங்கள் எதுவும் இல்லை என்று மலேசிய கடல்சார் அமலாக்கப் பிரிவு கூறியது.
ஒரு படகு மலேசியாவை நெருங்கி வருவதாக முதலில் தகவல் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து லங்காவி தீவுக்கு அப்பால் இரண்டு படகுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
லங்காவி அருகே கரை ஒதுங்கிய படகில் சுமார் 200 ரோஹிஞ்சா குடியேறிகளை மலேசிய அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும் இரண்டு படகுகள் மலேசியாவை நோக்கி வருவது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இரண்டு படகுகளில் வந்த 300 பேருக்கும் உணவு மற்றும் நல்ல குடிநீர் வழங்கி திருப்பி அனுப்பியதாக மலேசியாவின் கடல்சார் அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
Follow us on : click here