வயதாவதை தடுக்கும் சீக்ரெட் மூலிகை பொடி...!!! என்றும் இளமையுடன் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க...!!!

ஆண்கள் பெண்கள் என இருவரும் என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என விரும்புவதுண்டு.அதற்கு ஆரோக்கியமான உடல் தகுதி முக்கியம்.ஒவ்வொருவரும் ஆரோக்கியத்தின் புத்துணர்ச்சியை பெறுவது அவசியம்.அதற்கு இயற்கையான புத்துணர்ச்சி பானம் எடுத்துக் கொள்வதால் என்றும் இளமையுடன் இருக்கலாம். இளமைப் பொலிவை அதிகரிக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றவும்.
தேவையான பொருட்கள்:-
✨️ பெரிய நெல்லிக்காய் – இரண்டு
✨️ கடுக்காய் – ஒன்று
✨️ தான்றிக்காய் – ஒன்று
செய்முறை விளக்கம்:-
👉 பெரிய நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றையும் நன்கு உலர்த்தி, பொடியாக அரைக்கவும்.
👉 இது நாட்டு மருந்துக் கடைகளில் திரிபலா பொடி வடிவில் கிடைக்கிறது.
👉 இந்த திரிபலா பொடியை 100 கிராம் அளவில் எடுத்துக்கொள்ளவும்.
👉 அதன் பிறகு, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, ஒரு கிளாஸ் தண்ணீரை ஊற்றி சூடாக்கவும்.
👉 பின்னர் அதில் ஒரு டீஸ்பூன் திரிபலா பொடியைச் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
👉 இந்த பானத்தை தினமும் குடிப்பதால் ஆரோக்கியம் மேன்மை அடைவதோடு என்றும் இளமையுடன் இருக்கலாம்.
தேவையான பொருட்கள்:-
✨️ பெரிய நெல்லிக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி
✨️ தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
👉 ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி பெரிய நெல்லிக்காய் பொடியைச் சேர்க்கவும்.
👉 பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
👉 இந்த நெல்லிக்காய் பொடியை தினமும் சாப்பிடுவது இளமைப் பொலிவை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
✨️தேங்காய் பால் – ஒரு கிளாஸ்
✨️பாதாம் பிசின் – ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:-
👉 தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு, தண்ணீர் சேர்த்து அரைத்து பால் எடுக்கவும்.
👉 அதன் பிறகு, அதனுடன் ஒரு டீஸ்பூன் பாதாம் பிசினைச் சேர்த்து நன்கு ஊற வைக்கவும்.
👉 இந்த தேங்காய்ப் பாலை தினமும் குடிப்பதால் இளமை அதிகரிக்கும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan