யீஷூனில் நடைபெற்ற இரண்டாவது தீ விபத்து சம்பவம்...!!!
சிங்கப்பூர்: யீஷூன் அவென்யூ1, புளோக் 431C இல் உள்ள கிளப்ஹவுஸில் தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) மாலை 6.40 மணியளவில் யீஷூன் மாவட்ட தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.
இது குறித்த தகவலை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள்,புளோக்கின் 4வது மாடியில் கரும்புகை சூழ்ந்த வீட்டிற்குள் நுழைந்து தீயை கட்டுப்படுத்த முயன்றனர்.
தீ விபத்தின் போது வீட்டில் யாரும் இல்லை.
தீ விபத்தில் வீட்டின் வரவேற்பறை முற்றிலும் சேதமடைந்தது.
மேலும் வீட்டின் மற்ற இடங்களிலும் தீ பரவி கருமையாக காட்சியளித்தது.
இந்த தீ விபத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3வது முதல் 6வது மாடிகளில் வசிக்கும் 100க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Follow us on : click here