சிங்கப்பூரில் வாகன உரிமை சான்றிதழ் கட்டணங்களுக்கான ஏலக்குத்தகை நடைபெற்றது. இந்த ஆண்டு நடந்த இரண்டாவது ஏலக்குத்தகை ஏற்ற இறக்கத்தில் முடிவடைந்துள்ளது.
பெரிய கார்களுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது.அதாவது,102,000 வெள்ளியிலிருந்து 105,500 வெள்ளி உயர்வு.
சிறிய கார்களுக்கான கட்டணமும் உயர்ந்துள்ளது.80,000 வெள்ளியிலிருந்து 86,000 வெள்ளியாக உயர்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் கான கட்டணம் 10,900 வெள்ளியிலிருந்து 11,100 வெள்ளியானது.
வர்த்தக வாகனங்களுக்கான கட்டணம் 77,300 வெள்ளியிலிருந்து 77,100 ஆக குறைந்ததுள்ளது.
பொதுப் பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 107,800 வெள்ளியிலிருந்து 107,000 வெள்ளி வரைக் குறைந்துள்ளது. இவ்வாறு ஏலக் குத்தகை ஏற இறக்கத்துடன் முடிவடைந்தது.