ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்…… 42 விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க அதிகாரிகள் உத்தரவு……

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள 42 விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

மின்னஞ்சல் மூலமாக மணிலாவிலிருந்து பல சுற்றுலா தளங்களுக்கு செல்லும் விமானங்கள் வெடித்துச் சிதறக் கூடும் என்று மிரட்டல் வந்தது.அது பெரும்பாலும் புரளியாகவே இருக்கக்கூடும் என்றும் விமான போக்குவரத்து காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இருப்பினும் நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையமான மணிலா மற்றும் அதன் 2 பெரிய விமான நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன.

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கூடுதல் போலீசார் மற்றும் மோப்ப நாய்கள் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் அளவுக்கு பாதிப்புகள் ஏதுமில்லை என்றும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நெறிமுறைகள் நடைமுறையில் இருக்கிறது என்றும் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.