சாங்கி அருகே கடலில் விழுந்த நபரை தேடும் பணி தீவிரம்..!!!

சாங்கி அருகே கடலில் விழுந்த நபரை தேடும் பணி தீவிரம்..!!!

சிங்கப்பூர்:சாங்கி அருகே ஆடவர் ஒருவர் கடலில் விழுந்துள்ளார்.

அவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை மேடையிலிருந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து இன்று அதிகாலை 12.20 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.

அவரை தேடும் மீட்பு பணியில் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையமும் கடலோர காவல்படையும் ஈடுபட்டுள்ளன.

சம்பவம் நடந்த பகுதி வழியாகச் செல்லும் கப்பல்கள் ஆடவர் குறித்த தகவல் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக கடல்சார் ஆணையத்திடம் தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளது.