அமெரிக்காவில் வாட்டி வதைக்கும் வெயில்!! உருகிய நினைவுச் சின்னம்!!

அமெரிக்காவில் வாட்டி வதைக்கும் வெயில்!! உருகிய நினைவுச் சின்னம்!!

அமெரிக்காவில் வாட்டி வதைக்கும் வெயிலுக்கு ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மெழுகில் சிலை உருகியுள்ளது.

அங்கு வெப்பநிலை அதிகரித்து உச்சத்தை தொட்டு மெழுகு சிலை உருக தொடங்கியது.

லிங்கன் நினைவாக வைக்கப்பட்ட 6 அடி மெழுகு சிலை முதலில் அதன் தலை உருக ஆரம்பித்தது. பின்னர் ஒரு கால் அதன் உடற் பகுதியென மெழுகு உருக தொடங்கியது.

மேலும் அவருடைய கால் குமிழியாக மாறியது. அவர் அமர்ந்திருந்த நாற்காலியும் உருக தொடங்கியதால் தரையில் மூழ்கியது. தற்பொழுது அவருடைய சிலை பழுது பார்க்கப்பட்டுள்ளது.

ஆபிரகாமின் நினைவுச் சின்னம் வாஷிங்டன் டிசியில் உள்ள கேம்ப் பார்கர் தளத்தில் இருக்கின்றது. அந்த இடம் அகதிகள் முகாமாக இருந்தது. அங்கு தற்போது தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது.

சிலை உருகுவது இது முதல் முறை இல்லை. செப்டம்பரில் சிலையை அதே இடத்தில் வைக்கப்பட்டது. மெழுகு நினைவுச் சின்னத்தில் நூறுக்கு அதிகமான விக்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாரம் வெப்பம் அதிகமாக நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தலையை மெழுகினால் செய்து மீண்டும் இணைக்கப்படும் என்று உள்ளூர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.