போதுமான வசதிகள் இல்லாமல் தவிக்கும் பள்ளி மாணவர்கள்!! தீர்வு கிடைக்குமா?
அரிமளம் ஒன்றியம் கீழப்பனையூர் ஊராட்சியைச்சேர்ந்தது ஒத்தைப்புளிக்குடியிருப்பு. இங்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப்ப்பள்ளி உள்ளது. இதில் 60 மாணவ,மாணவியர் படித்துவருகின்றனர். இவர்களுக்கு பாடம் சொல்லித்தர 2 ஆசிரியர்கள் வேலை பார்க்கின்றனர். கல்வித்தரம் நன்கு உள்ளது. ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் கிடையாது. குடிநீர்,கழிப்பிட வசதிகள் இல்லை. இதனால் ஊராட்சி சார்பில் வாரம் இருநாள் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை.
அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் இருந்து இதுவரை குடிநீர் வந்த பைப் உடைந்து விட்டதாம். இதனால் மாணவ,மாணவியர் ,ஆசிரியர்கள் கடந்த 3 மாதங்களாக பெரிதும் சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வசதி போதுமானதாக இல்லை. தற்போது ஊராட்சி நிர்வாகம் டேங்கர் லாரி மூலம் வாரம் இருமுறை குடிநீர் வழங்கி வருகின்றனர். இது போதுமானதாக இல்லை. கழிப்பிடங்கள் இருந்தும் அதனை பயன்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவரை உயர்நிலைப்பள்ளியில் இருந்து குடிநீர் வந்த குழாய் உடைந்துவிட்டதால் கடந்த 3 மாதங்களாக மாணவ,மாணவியர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஊராட்சி நிர்வாகம் பள்ளி வளாகத்தில் விரைவில் ஆழ்குழாய் கிணறு அமைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அரிமளம் ஒன்றிய பாரதிய ஜனதா செயலர் கணேசன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.