சிங்கப்பூரில் பள்ளி விடுமுறை காலம்!!புதிய நடவடிக்கைகள் ஏற்பாடு!!

சிங்கப்பூரில் பள்ளி விடுமுறை காலம்!!புதிய நடவடிக்கைகள் ஏற்பாடு!!

சிங்கப்பூர்: ஜாலான் புசார் பகுதியில் புதிதாக குடியேறும் குடும்பங்கள் அப்பகுதியை பற்றி அறிய
வாய்ப்பு கிடைத்துள்ளது.

சிங்கப்பூரில் மிகப்பழமை வாய்ந்த குடியிருப்பு பகுதிகளில் ஒன்றான ஜாலான் புசாரைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அந்த நடவடிக்கைகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

இந்த நடவடிக்கைகளின் மூலம் மக்கள் அப்பகுதியின் தொடக்க கால வரலாற்றையும், பண்பாட்டு கலாச்சாரத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.

ஜூன் மாதம் பள்ளி விடுமுறை காலம் என்பதால் விடுமுறையை ஒட்டி இந்த நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் கலந்து கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

அவர்கள் அப்பகுதியில் உள்ள வழிபாட்டு தளங்கள்,இறைச்சி சந்தை உள்ளிட்ட 12 இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் தடயங்களுக்கும், வார்த்தை புதிர்களுக்கும் விடை கண்டறிய முடியும்.

சைனா டவுன், கம்போங் கிளாம்,கொளம் ஆயர் போன்ற கலாச்சார ரீதியான வளமான சமூகங்கள் அங்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் புதிதாக குடியேறும் இளம் குடும்பங்களுக்கு அப்பகுதியின்
வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அமையும்.

தொடர்பு, தகவல் அமைச்சரும், அப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசஃபின் தியோ, இளம் குடும்பங்களின் வருகை அங்கு அதிக வரவேற்பதாக கூறினார்.

எனவே குடியிருப்பு வாசிகள் அந்த பகுதியின் கலாச்சாரத்தை அறிந்து கொள்ளும் வகையில் Jalan Besar for Families என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.