சிங்கப்பூரில் அதிகரிக்கும் பள்ளி பேருந்து கட்டணம்..!!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் பள்ளி பேருந்து கட்டணம்..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பள்ளி பேருந்து கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மாற்று பயண ஏற்பாடுகளை நாடுகின்றனர்.

ஒரு வழி பயணத்திற்கு பள்ளி பேருந்து கட்டணம் மாதத்திற்கு சுமார் $240 வசூலிக்கப்படுகிறது.

இதனால் பெற்றோர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும்,வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 4 கிலோமீட்டராக இருக்க வேண்டும்.

பள்ளிக்கு அப்பால் வசிப்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஏறத்தாழ 180 தொடக்கப் பள்ளிகளில், 34 தொடக்கப் பள்ளிகள் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய பள்ளி பேருந்து சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கல்வி அமைச்சகம் இந்தத் தகவலை data.gov.sg என்ற டேட்டா போர்ட்டலில் வெளியிட்டது.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2024 க்கு இடைப்பட்ட இடைக்காலத்திற்கான ஏலக்குத்தகைக்கான அழைப்பு வெளியிடப்பட்டது.

2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் பத்து பள்ளிகளாவது பள்ளி பேருந்து சேவைகளுக்கு அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதனால் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப லைலோ போன்ற தனியார் கார் வாடகை நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர்.

லைலோவில் இருந்து சுமார் 60 முதல் 70 தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் மாணவர்களுக்கு வீட்டிற்கு பள்ளி மற்றும் பள்ளிக்கு வீட்டிற்கு போக்குவரத்து சேவைகளை வழங்குகிறார்கள்.

தூரம் மற்றும் வாகன வகையைப் பொறுத்து ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வழி பயணத்திற்கு $20 முதல் $50 வரை வசூலிக்கப்படுகிறது.

தனியார் பேருந்து சேவைகளை மற்ற மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொழுது ஒவ்வொரு மாணவருக்கான கட்டணத் தொகை குறைகிறது.

இதனால் பல பெற்றோர்கள் தனியார் பேருந்து சேவையை நாடுகின்றனர்.

Follow us on : click here ⬇️