கடல்துறைச் சார்ந்த படிப்புகளுக்காக வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை…!!!

கடல்துறைச் சார்ந்த படிப்புகளுக்காக வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 70க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கடல்துறைச் சார்ந்த படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

அந்தத் துறையில் திறமையை வளர்ப்பதற்காக கல்வி விருது வழங்கப்படுகிறது.

கப்பல் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து மற்றும் துறைமுகச் செயல்பாடுகள் போன்ற பல்வேறு கடல்சார் துறைகளை படிக்கும் மாணவர்கள் விருதுகளை பெற்றனர்.

கல்விசார் சிறப்பை அங்கீகரித்து வெகுமதி அளிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு தொழில்துறை நெட்வொர்க்கிங் நிகழ்வுகள், வழிகாட்டுதல், பயிற்சிகள் போன்றவற்றில் பங்கேற்கும் வாய்ப்புகளை மாணவர்களுக்கு அளிப்பதற்காக MaritimeONE உதவித்தொகை வழங்குகிறது.

அவர்களில் பெரும்பாலோர் கடல்சார் படிப்பைத் தொடர்கின்றனர்.

மீதமுள்ளவர்கள் செயற்கை நுண்ணறிவு, பொறியியல் மற்றும் சட்டம் போன்ற துறைகளையும் தொடர்கின்றனர்.

கடல்துறை சார்ந்த அமைப்புகள், தொழிற்சங்கங்கள்,அறக்கட்டளைகள் நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களும் என 39 நிறுவனங்கள் இதற்கு ஆதரவளித்து வருகின்றன.

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் (SUSS) மாணவர்களுக்கு MaritimeONE உதவித்தொகை வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

SUSS இலிருந்து MaritimeONE உதவித்தொகை பெற்ற இரண்டு மாணவர்கள் சப்ளை செயின் நிர்வாகத்தில் தங்கள் பட்டப்படிப்பைத் தொடர்கின்றனர்.

இது உலகளாவிய கடல்சார் அறிவு மையமாக சிங்கப்பூரின் சிறப்பு R&D திறன்களை ஆழப்படுத்த உள்ளூர் கடல்சார் ஆராய்ச்சி திறமைக் குழுவை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Follow us on : click here ⬇️