வருமானத்தில் பின் தங்கிய குடும்பங்களுக்கு கை கொடுக்கும் திட்டம்!!
சிங்கப்பூர்:
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் புதிய உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டமானது குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் உள்ளது. 200=100@ ஈஸ்ட் கோஸ்ட் புதிய திட்டம் குறைந்த அல்லது நடுத்தர வருமானத்தை ஈட்டும் குடும்பங்கள் 100 வெள்ளி வரை தள்ளுபடியைப் பெறலாம்.
இது அவர்களின் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு உதவியாக இருக்கும்.
ஃபெங்ஷான் சமூக மன்றத்தில் 1,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
சுமார் 6,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இரண்டு ஆண்டிற்குள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகர்கள் வழங்கிய நன்கொடை உதவியால் பொருட்களின் விலைத் தள்ளுபடியை சமாளிப்பதற்கு உதவுவதாக தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.
மேலும் இதுபோன்று பல்வேறு குழுக்கள் ஆதரவு கொடுப்பதன் மூலம் வருமானத்தில் பின் தங்கிய குடும்பங்களை மேன்மை அடைய செய்யலாம்.
இத்திட்டத்தை வெற்றி பாதையை நோக்கி கொண்டு செல்ல அனைவரும் இணைந்து செயல்பட்டால் அது சாத்தியமாகும் என்கின்றனர்.
எனவே பல்வேறு குழுக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்பதே தன்னார்வலர்களின் கருத்தாக உள்ளது.
இத்திட்டத்தால் பல்வேறு குடும்பங்கள் தங்களின் அத்தியாவசிய பொருட்களை தள்ளுபடி விலையில் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.
Follow us on : click here