சிங்கப்பூர் வட்டார, அனைத்துலக தலைமையமாக திகழ்கிறது.நிபுணத்துவச் சேவைத்துறைக்கான பெருந்திட்டத்தைப் புதுப்பிப்பதன் மூலம் சிங்கப்பூர் நிலைப்பாட்டையும் மேலும் மேம்படுத்த முடியும் என்று தெரிவித்தது.
நிபுணத்துவத் தொழிலாளர்கள், மேலாளர்கள்,நிர்வாகிகள்,தொழில்நுட்பர்கள் உள்ளிட்டவர்களுக்கான வேலைகளைத் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சகம் கூறியது.அதாவது,இவர்களுக்காக 2020 முதல் 2025 வரை ஆண்டுதோறும் 3800 வேலைகளை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தது.
வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்தி கொள்ளும் நிலையில் நிபுணத்துவச் சேவைத் துறைகள் இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் Gan Kim Yong கூறினார்.இதற்கு உந்து தளமாக மின்னிலக்கமயம்,நீடித்த நிலைத்தன்மை, தென்காசியாவில் புதிதாக உருவாகும் புதிய சந்தைகள் உள்ளிட்டவைகள் அமைந்து இருக்கின்றது என்று கூறினார்.
சிங்கப்பூரின் பொருளியலின் ஆணி வேராக உற்பத்தி துறை திகழ்கிறது.இதன் மூலம் சிங்கப்பூர் தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தி வாய்ப்புகளிலும் அடையாளம் காணவும் முயற்சி செய்து வருகிறது.