சிங்கப்பூரில் முதியவர்களுக்காக திட்டம்!! பயன்பெற போகும் 300,000 க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள்!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மூத்த குடிமக்கள் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதியவர்கள் பயனடையும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள திட்டம்தான் medisave மருத்துவ சேமிப்பு திட்டம்.
மூத்த தலைமுறையைச் சேர்ந்த சுமார் 300,000 க்கும் மேற்பட்ட தகுதியான முதியவர்கள் MediSave மருத்துவச் சேமிப்பு திட்டத்திற்காக 150 மில்லியன் வெள்ளிக்கு மேல் மருத்துவ சேமிப்பு நிரப்பும் தொகை வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் மெடிஷீல்டு லைஃப், கேர்ஷீல்டு லைஃப், எல்டர்ஷீல்டுக்கான மருத்துவக் காப்பீட்டுச் சந்தாக் கட்டணத்தைச் செலுத்த முடியும் என்று கூறப்பட்டது.
இந்தத் தொகையை பயன்படுத்தி மற்ற மெடிசேவ் மருத்துவச் சேமிப்பு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மூத்தோர்கள் உள்நோயாளிகளுக்கான சிகிச்சை,வேறு சில வெளிநோயாளர் சிகிச்சைகளுக்கும் அந்த நிரப்பு தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மூத்த தலைமுறையைச் சேர்ந்த முதியவர்கள் ஆண்டுதோறும் 250 வெள்ளியிலிருந்து 900 வெள்ளி வரை மருத்துவ சேமிப்பு தொகையை பெறுகிறார்கள்.
Follow us on : click here