சிங்கப்பூரில் சிண்டாவின் Door Knocking என்ற திட்டம் உள்ளது. இந்த திட்டமானது 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பல வசதி குறைந்த குடும்பங்கள் பல காரணங்களால் அவர்களுடைய சிரமங்களைப் பகிர்ந்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர்.அதனால் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலமாக வீடுவீடாக சென்று பிரச்சனைகள் கண்டறியப்படுகிறது.
சிண்டா இதுவரை கிட்டத்தட்ட ஆயிரம் குடும்பங்களுக்கு அவர்களுக்கு தேவையான உதவிகளை அளித்துள்ளது.
மார்ச் 26-ஆம் தேதி ஜாலான் புக்கிட் மேரா புளாக் 115,116,117 உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் சுமார் 40 இந்தியக் குடும்பங்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை கேட்டறியப்பட்டன.
சிண்டா இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த இளம் தொண்டுழியர்களும் ஆர்வமாக பங்கேற்றனர்.
அங்கு வசிக்கும் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மருத்துவப் பிரச்சனை, நிதியுதவி,மாணவர்களுக்கான கல்வி இளையர் திட்டங்கள், தனித்து வசிக்கும் மூத்த குடிமக்களுக்கான ஆதரவு முதலியவையாகும்.
அவர்களுக்கான உதவிகளை இளைஞர்கள் வழங்கினர்.மார்ச் 26-ஆம் தேதி வாரயிறுதி நாளாக இருந்தாலும் இளைஞர்கள் சமூகத்திற்குத் தொண்டு செய்ய களமிறங்கினர்.
இந்த முயற்சி முதன்மை நோக்கம் அதிகமான வாடகை வீடுகளுக்குச் சென்று அவர்களுடைய தேவைகளைத் தீர்வு காண்பதே.
சிண்டாவின் Door Knocking தலைவர் இந்திராணி ராஜா.அவரும் இதில் கலந்துக் கொண்டார். அப்போது சில குடும்பங்களைச் சந்தித்து பேசினார்.