சிங்கப்பூரில் நோய் தொற்று பரவலின் போது தற்காலிக நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டது.
அதில் சில நடவடிக்கைகளை நிரந்தரமாக்க திட்டமிட்டுள்ளது.
இதனை மனிதவள அமைச்சகம் அறிவித்தது.
நிரந்தரமாக்க உள்ள திட்டங்கள் நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்று கூறியது.
SGUnited Jobs and Skills நிலையங்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் 24 குடியிருப்பு பேட்டைகளிலும் நிறுவப்பட்டுள்ளன. அதனை மனிதவள அமைச்சகம் குறிப்பிட்டது.
அந்த நிலையங்களில் உள்ள அதிகாரிகள் வேலை தேடுவோர்களுக்கு பொருத்தமான வேலைகளைத் தேடிக் கொள்வதற்கு உதவுகின்றனர்.
வேலை தேடுபவர்களுக்கு இது நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கிறது.
வேலை செய்பவர் நடுவயதில் வேலை மாறுவோர் பயிற்சிக்காக நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் நடவடிக்கைகள் தொடரும் என்றும் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்களும் பலன் பெறுவர் என்று கூறினார்.
2 புதிய தங்கும் விடுதிகள் மேம்பட்ட வசதிகளைக் கொண்டு கட்டவிருப்பதையும் கூறினார்.