சிறப்புக்கல்வி ஆசிரியர்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம்…!!!

சிறப்புக்கல்வி ஆசிரியர்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கு பாடசாலைகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

பள்ளிகளில் முழுநேரமாக பணியாற்றும் ஆசிரியர்கள் பயிற்சிகளுக்கு சென்று தங்களது திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு இந்த ஏற்பாடுகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வி அமைச்சகம் சிறப்புத் தேவையுடைய குழந்தைகளின் ஆசிரியர்களிடமிருந்து கருத்துக்களை சேகரித்துள்ளது.

தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள நேரம் கிடைப்பது கடினமாக உள்ளதாக ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மனிதவள மேலாண்மையை சீரமைக்கவும் அமைச்சகம் சிறப்புத் தேவையுள்ள மாணவர்களுக்கான பள்ளிகளுடன் இணைந்து செயல்படுகிறது.

அத்தகைய ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக சிறப்புக் கல்வி ஆசிரியர்களும் வழக்கமான பள்ளிகளின் ஆசிரியர்களும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர்கள் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொண்டு சிறப்பான கல்வியை வழங்க முடியும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் சிறப்புக் கல்வி ஆசிரியர்கள்
பயிற்சிக்காகவோ, மருத்துவ அல்லது அவசர விடுப்பு எடுக்க கூடுதல் நேரம் கிடைக்கும் என கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

 

Follow us on : click here ⬇️