
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் QR குறியீடுகள் உள்ளன.
அதன் மூலம் பல மோசடிகள் நடந்து வருகிறது.அதன் சம்பந்தப்பட்ட மோசடி சம்பவங்களும் அதிகமாக பதிவாகின்றன.
எழுத்துப்பிழைகள் அல்லது சேதப்படுத்தப்பட்ட QR குறியீடுகளை நன்கு சரி பார்ப்பது மோசடிகளைத் தடுக்க உதவும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு பதிவான மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தபட்சம் 20,000 வெள்ளி இழந்ததாக சொல்லப்படுகிறது.
உணவகங்களில் உணவு வகை தேர்ந்தெடுக்க அல்லது வசதியான முறையில் கட்டணம் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.
குறியீடை ஸ்கேன் செய்ததும் செயலிகள் அல்லது இணைப்புகளுக்கு அது இட்டு செல்லும்.

சில சமயங்களில் QR குறியீட்டை ஸ்கேன் செய்பவர்களிடம் எதிர்பாராத விதமாக அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்படுகின்றது.
பயனீட்டாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு இணையப் பாதுகாப்பு அமைப்பும், காவல்துறையும் கேட்டுக் கொண்டது.
தொழில்நுட்பச் சாதனங்களின் மென்பொருளை அடிக்கடி புதுப்பிக்கும்படி ஆலோசனை கூறப்படுகிறது.
அதோடு, இணைப்புகளிலுள்ள எழுத்துப் பிழைகளைச் சரி பார்ப்பது நல்லது.
அதிகப்படியான சலுகைகள் வழங்கப்படும்போது அவற்றின் நம்பகத்தன்மையையும் ஆராய வேண்டும்.அது அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.