சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட மோசடி!! மக்களே உஷார்!!
சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்ட மோசடி பற்றி காவல்துறை மற்றும் தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆள்மாறாட்ட மோசடி செய்பவர்கள் சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் நாணய வாரியம்,SingCert அமைப்புகள், தகவல் மின்னிலக்க மேம்பாட்டு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் போல பொதுமக்களைத் தொடர்பு கொள்வது, மலேசிய காவல்துறை அதிகாரிகள் பேசுவது போல பேசி பொதுமக்களின் வங்கி விவரங்கள் மற்றும் சுய விவரங்கள் உள்ளிட்டவைகளை அந்த கும்பல் கேட்கும் அல்லது பணம் பரிவர்த்தனை செய்யுமாறு கேட்பார்கள்.
அரசாங்க அதிகாரிகள் நேரடியாக பொதுமக்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் தனிப்பட்ட விவரங்களை யாரும் கேட்க மாட்டார்கள் என்று மேம்பாட்டு அமைச்சகம் நினைவூட்டியது.
Follow us on : click here