பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக்கூட்டம்!!
பொன்னமராவதி,பிப்.22-
பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக்கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே
மூலங்குடி கிராமத்தில் ஸ்ரீ பொய் சொல்லா மெய்யர் அய்யனார் கோவில்,ஸ்ரீ பொன்னன் கோவிலில் ஏழு சாமியாடிகள் மற்றும் (தலித்)குடும்பர் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் உரிமைகளுக்கு எதிராக செயல்படும். புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பொன்னமராவதி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளரை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து முன்னணியின் மாவட்ட குழு உறுப்பினர் நல்லதம்பி தலைமையில் பொன்னமராவதி இந்து சமய அறநிலை துறை ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் .
பிப்ரவரி 22 வியாழக்கிழமை அன்று நடைபெற இருந்த நிலையில் புதன்கிழமையன்று பொன்னமராவதி வட்டாட்சியர் சாந்தா முன்னிலையில் நடைபெற்றது. சமாதான கூட்டத்தில் ஏழு சாமியாகள் மற்றும் (தலித்) குடும்பர் தேவேந்திர குல வேளாளர் மக்கள் எதிர்வரும் திருவிழா காலங்களில் புதுக்கோட்டை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையரிடம் முறையாக மனு செய்து கொட்டகை அமைத்து அன்னதானம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட குழு உறுப்பினர் நல்லதம்பி,மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், சிபிஎம் ஒன்றிய செயலாளர் பக்ருதீன், ராசு, மணி , முருகேசன் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.