இணையச் சேவை தொழிலாளர்களுக்கான ஊதியம் விரைவில் அதிகரிக்க வாய்ப்பு…!!!

இணையச் சேவை தொழிலாளர்களுக்கான ஊதியம் விரைவில் அதிகரிக்க வாய்ப்பு...!!!

சிங்கப்பூர்: தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களுக்கான மசோதா அமல்படுத்தப்பட்டால், அவர்களின் சம்பளம் 17 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறியது.

இணையதளத்தின் மூலம் சேவை வழங்கும் அனைத்து ஊழியர்களும் பயன் பெறும் வகையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

இணையதளச் சேவை நிறுவனங்கள் ஊழியர்களின் கூடுதல் தொகையை பணியாளர்களின் மத்திய சேமிப்புக் கணக்கில் நிரப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊழியர்கள் வேலையிடக் காய இழப்பீடு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறார்கள்.

புதிய சட்டம் நடைமுறைக்கு வரும்போது, ​​இணைய சேவை ஊழியர்களின் சங்கமானது தங்கள் நலன்களை கூட்டாக பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டப்பூர்வ அதிகாரத்தைப் பெற்றிருக்கும்.

புதிதாக உருவாக்கப்பட்ட இணைய சேவை பணியாளர்கள் சங்கங்கள், டாக்ஸி டிரைவர்கள், தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி சேவை பணியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.