சிங்கப்பூரில் ஊழியர்களுக்கான சம்பள வழிகாட்டி வெளியீடு!! ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம்!!

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கான சம்பள வழிகாட்டி வெளியீடு!! ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம்!!

ஊழியர்களுக்கு நியாயமான, நிலையான ஊதிய உயர்வை நிறுவனம் வழங்க வேண்டும் .இதனை தேசிய சம்பளம் மன்றம் தெரிவித்துள்ளது.

குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு அவர்களின் மாதச் சம்பளத்தில் 5.5 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை அல்லது குறைந்தபட்சம் 100 வெள்ளி முதல் 120 வெள்ளி வரை ஊதிய உயர்வு அளிக்கும்படி தேசிய சம்பளம் மன்றம் பரிந்துரைத்துள்ளது.

அதில் எது அதிகமோ அதை முதலாளிகள் செலுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்கள் அதிகபட்சமாக மாதந்தோறும் 2500 வெள்ளி சம்பளம் சம்பாதிப்பவர்கள்.

அதன் சம்பள வழிகாட்டியில் , சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என மன்றம் குறிப்பிட்டுள்ளது.

சிறப்பாக செயல்படாத நிறுவனங்கள் ஊதியக் கட்டுப்பாட்டைப் பின்பற்றலாம் எண்டுறம் நிறுவனம் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் மன்றம் கூறியது.

இவ்வாண்டு(2024) டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு (2025) நவம்பர் மாதம் வரையிலான வழிகாட்டி அது.