சிங்கப்பூரில் Sakura Buffet உணவு நிறுவனத்தின் உரிமம் ரத்து!! வெளிச்சத்துக்கு வந்த குறைபாடுகள்!!
சிங்கப்பூரில் Sakura Buffet நிறுவனத்தின் உணவு விநியோகம் செய்யும் உரிமத்தை சிங்கப்பூர் உணவு அமைப்பு ரத்து செய்துள்ளது.
இதனை நேற்று வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூர் உணவு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு சமந்தமாக இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நிறைய புகார்கள் பெறப்பட்டுள்ளதாக கூறியது.
புகார்களை அடிப்படையாக சோதனை நடத்தப்பட்டது.
உணவுகள் சரியாக சமைக்காமல் இருப்பது, சமைத்த உணவுகளில் முடி, பூச்சிகள் கிடப்பது போன்ற புகார்கள் வந்ததாக தெரிவித்தது.
இதனையடுத்து கேலாங் பாருவில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வில், உணவு பாதுகாப்பு குறைகள் இருப்பது தெரிய வந்தது.
மேலும் இந்த நிறுவனம் 12 உணவு நிறுவனங்களுடன் இணைந்து உணவுகளை வழங்கி வந்ததும் கண்டறியப்பட்டது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg