விலங்கை வேட்டையாட கொண்டு வந்த துப்பாக்கி நண்பனை பதம் பார்த்த சோகம்.!!!

விலங்கை வேட்டையாட கொண்டு வந்த துப்பாக்கி நண்பனை பதம் பார்த்த சோகம்.!!!

தாய்லாந்தில் ஒருவர் தனது நண்பரை விலங்கு என தவறாக நினைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவத்தில் 64 வயதான பூன்மீ கொங்க்லின்  என்ற நபர் உயிரிழந்தார்.

அவரை சுட்டவர் 64 வயதான பவீ பாக்டீமெ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் மற்றொருவருடன் காட்டுக்கு வேட்டையாட சென்றதாக கூறப்படுகிறது.

மூவரும் தனியே காட்டுக்குள் அலைந்தனர்.

பவீ இருட்டில் கண்ணை பார்த்தபோது அந்த திசையை நோக்கிச் சுட்டதாக கூறப்படுகிறது.

தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் பூன்மீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

பின்னர் தாம் செய்த பெரும் தவறால் நண்பன் உயிரிழந்ததை எண்ணி வருந்தியுள்ளார்.

பின்னர் அவர் தாம் செய்த குற்றத்திற்காக போலீசில் சரணடைந்தார்.

Follow us on : click here ⬇️

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0