சிங்கப்பூருக்கு வேலைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகம். சிங்கப்பூரில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி தெரியாதவர்கள் பலர் இருப்பர். இது அவர்களுக்கானது.
▪️ உங்களை எந்த வேலைக்காக சிங்கப்பூருக்குள் வர அனுமதித்தார்களோ அந்த வேலை மற்றும் கம்பெனியில் மட்டுமே பணிபுரிய வேண்டும். அதை தவிர்த்து வேறு எந்த வேலையும் பார்க்க கூடாது. பகுதி நேர வேலைகள் (Part Time jobs) பார்க்க கூடாது.
▪️உங்களின் வேலை அனுமதி அட்டை காலாவதி ஆனதும் கண்டிப்பாக தாய் நாட்டுக்கு திரும்ப வேண்டும். அப்படி இல்லையென்றால் அதனைப் புதுப்பிக்க வேண்டும்.
▪️ நீங்கள் பணிபுரியும் கம்பெனியில் முதலாளி உங்களின் சம்பளத்தை 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும். சம்பள நாளே தாண்டிவிட்டும் சம்பளம் கொடுக்கவில்லை என்றால் நீங்கள் தாராளமாக MOM இல் புகார் அளிக்கலாம்.
▪️ நீங்கள் சிங்கப்பூரில் எந்த கம்பெனியில் வேலை செய்ய உள்ளீர்களோ அந்தக் கம்பெனியின் முதலாளி உங்களுக்கான தங்குமிட வசதியை செய்து கொடுக்க வேண்டும்.
▪️ வார இறுதி நாள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் உங்களை வேலை செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது. நீங்கள் விரும்பினால் மட்டுமே வார இறுதி நாள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் வேலை செய்யலாம். இந்த நாட்களில் நீங்கள் பணிபுரிவதற்கான சம்பளத்தை OT அடிப்படையில் கொடுக்க வேண்டும்.
▪️ நீங்கள் OT(Over Time) கூடுதல் மணி நேரம் வேலை செய்தால் அதற்கு குறைந்தது 1.5 மடங்கு கொடுக்க வேண்டும்.இதைப் பற்றி இன்னும் கூடுதலாக தகவலை தெரிந்துகொள்ள MOM வெப்சைட்டில் தெரிந்து கொள்ளுங்கள்.