ருதுராஜ் கெய்க்வாட்- ஐ பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! கொந்தளித்த ரசிகர்கள்!!
ஐபிஎல் தொடர் கடந்த சனிக்கிழமை மே 18-ஆம் தேதி அன்று பெங்களூரில் நடைபெற்றது. அதில் ஆர் சி பி அணியும், சிஎஸ்கே அணியும் மோதிக்கொண்டன.
இதில் முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பீல்டிங்கை தேர்வு செய்தது . சென்னை அணி கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை இருந்த நிலையில் , வெறும் 7 ரன்களே எடுத்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தது.
இதற்கு ருதுராஜ் கெய்க்வாட்டின் மோசமான கேப்டன்சியே காரணம் என பல விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்தனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணமாக செயல்பட்ட கான்வே, ராயுடு, தீபக் சஹர், பதிரானா, மொயின் அலி போன்ற பந்துவீச்சாளர்கள் தங்களது ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டனர்.
ஆனால் இந்த ஆண்டு ராயுடு ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார். அதனால் அவரது இடத்திற்கு மிட்சல் கொண்டு வரப்பட்டார். ஆனால் இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்கள் ஒருவர் மாற்றி ஒருவராக விலகி வந்தனர்.
அதுவே தோல்விக்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.
முக்கியமான வீரர்கள் சிலர் டக் அவுட் ஆனதை தொடர்ந்து, பவுலிங் மாறுதல்களிலும்
பல சொதப்பல்கள் செய்ததாகவும் சிஎஸ்கே ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக பவுலர்கள் தேஷ் பாண்டே, ஷாதுல் போன்ற பந்துவீச்சாளர்கள் தனது ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
கடந்த தொடரில் பத்திரனா சிறப்பாக செயல்பட்டதாகவும், தற்போதுள்ள பந்துவீச்சாளர்கள் சரியாக செயல்படாததும் சிஎஸ்கே வின் தோல்விக்கு முக்கிய காரணம் எனவும் சிஎஸ்கே ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.
மேலும் ருதுராஜ் கெய்க்வாட் தனது கேப்டன்சியை சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.
மேலும் தோனியின் கேப்டன்சி சிஎஸ்கே விற்கு முக்கியமானதாக இருந்ததாகவும் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ்கில் ராசி இல்லாமல் இருக்கலாம் என்றும் கூறினர்.இருப்பினும் சிஎஸ்கே அணி நிர்வாகம் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியில் தொடர்ந்தால் இனி வரும் தொடரில் சிறப்பாகவும்,புது யுத்தியுடனும் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg